Saturday, March 14, 2009

"காகி தாகி"


வணக்கம் கண்ணு
வணக்கம் பெரிசு

இந்தப்பா ஸ்வீட் டு கொண்டாடு நாட்டாமை பாஸ் பண்ணிடான்
ஸூபர் அப்பு...
உன் ரிஸல்ட் என்ன ஆச்சு?
அத என் கேட்குற பெர்சு, புட்டு கிட்டேன், அதுனால லான்ஸ் ப்லோக் போயி என்க்லீபிஷ் எழுதலாம்னு இருக்கேன்...

லான்ஸ்
ப்லோக் நாமா போச்சு...
வேணா பெர்சு அருவா முதுகுல தான் இருக்கு...

சரி எனக்கு ஏன்பா வம்பு வந்த வேலைய கவனிப்போமா?
சரி "காகி தாகி" தான ஸ்டார்ட் முசிக்...

இருப்பா மக்களுக்கு முத காகி தாகினா என்னனு சொல்லிடுறேன் காகி தாகினா, காகி தாக்கி பேச போறதுனால நிகழ்ச்சி பெயர் "காகி தாகி"...

வெல்கம் டு காகி தாகி நான் உங்க சிலுவ இல்ல மாம்பலம் மாமு,
நான் உங்க நாட்டாமை இல்லவே இல்ல நான் சாமுவேல் ஜாக்சன் சாமு,
நம்ம நிகழ்ச்சில இன்னைக்கு நம்ம பிளாக்கர் காகி தான் கெஸ்ட்
எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்

டேய் பெர்சு தலை என்ட்ரி ஆவுது பாரு எங்க போற நீ?
வாங்கோ வாங்கோ மிஸ்டர் காகி
வெல்கம் மாமே, சும்மா ஹீரோ மாதிரி இருக்க பா
அவர ஏன்பா லாய்கிற
பெர்சு அருவா அருவா..
வாங்க வாங்க ஹீரோ..
அது...

வணக்கம் மாமு அன் சாமு,

எங்க நிகழ்ச்சில அட்டடென்ஸ் கொடுத்ததுக்கு நன்றி
ஆமா
நன்றி

யோவ் பெர்சு நீ என்ன எக்கோவா?
சாரி மாமு கேள்விய நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா

தொடா இவரு பெரிய சிவாஜி கணேசன்...
இல்லபா நான் சிவாஜி பாஸ்
நீ இப்போ fail டா,
அருவாள உள்ள வை பா..நீயே கேளு

மாமு: கார்த்திக்ங்கறது உங்க பேரு.. காக்கிங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?? (வேதம் புதிது ஸ்டைல பளார் பளார் பளார்)

சாமு: ஐய்ய... அவரு காவல்துறைல இருக்கணும்னு விருப்பம்.. பாக்க சிரிப்பு போலிஸா இருந்தாரு.. ஆனாலும் கெத்து காட்டணும்ல, அதான் காக்கினு பேரு!! சரிதானே தல?? என்னப்பா சுவத்தயே வெறிச்சி பாக்குறீங்க???

மாமு: அது இல்ல மச்சி, சின்ன வயசுல இருந்து அவர் ஸ்குலு யுனிஃபார்ம் கலர் காக்கி.. அதுனால தான்

காகி: இந்த ப்ரோக்ராம்க்கு வந்தது என் தப்பு...குத்துங்க முதலாளி குத்துங்க

சாமு: ஏதோ கம்பனி விசயமா ஊட்டி போனிங்களே? யாருக்கு ஊட்டி விட்டீங்க?? உங்களுக்கு நல்லா கம்பனி கிடச்சதா??

காகி: ஏதோ டபுள் மீனிங் மாதிரி இருக்கே??

மாமு: சே சே.. எஸ்.ஜே சூரியா படம் பாக்காதீங்கனா கேக்குறீங்களா?? காலேஜ் பையன், பொருளாதாரம் வேற மோசமா இருக்கு.. இப்ப நல்ல கம்பெனி கிடச்சி, பாக்க வேண்டியதுல்லாம் பார்த்தா தான் நாளைக்கு உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்...

சாமு: பழமொழி இருக்குலே... ஊரார் பிள்ளய ஊட்டி வளர்த்தா நம்ம பிள்ள தானா வளரும்.. அதான் நண்பர்களுக்குலா ஊட்டி விட்டீங்களானு கேட்டோம்.. தப்பா எடுத்துக்காதீங்க...

காகி: ரொம்ப நல்ல போச்சு...

மாமு: என்னாது பேதியா???.

காகி: (மனசுக்குள்) டேய் போடாக் .....

மாமு: என்னப்பா பதிலே இல்ல?? கம்பெனி ஸ்சிக்ரெட்னு சொல்வாங்களே.. அது இதுதானோ??

சாமு: வீடு மச்சான் இப்படியே ஏந்திருச்சி ஓடிட போறாரு….இந்த எலக்ஸன்லே யாருக்கு உங்க ஓட்டு? ராமாதாஸ் மாதிரி குழப்புறீங்க??

காகி: நான் எங்கே குழப்புனேன்??

சாமு: போன வாரம் கேப்டன் சூப்பர்னு சொன்னீங்க?

காகி: அது தோனிய பார்த்து...

மாமு: அம்மா தான் எல்லாம் சொன்னீங்க??

காகி: அது என் தாய்

சாமு: இல்ல... நீங்க தி.மு.க கட்சியின் விசுவாசி அதுனாலே தான் அண்ணா பல்கலைக்கழகத்துல சேர்ந்தீங்க??

சாமு: நீங்க ஏன் காதலில் சிக்கவில்லை?

மாமு: அவர யாரும் காதலிக்க.. அதான்..

சாமு: இல்ல.. அவர்கிட்ட ஜானட் ஜாக்சன் ப்ரோபோஸ் பண்ணாங்க...

மாமு: அப்றோம்?

காகி: அப்றோம் அந்த அந்த பொண்ணு யார் கூட போச்சோ...

மாமு: அச்சசோ

சாமு: அச்சச்சோ இல்லடா போச்சோ..

காகி: (மனசுக்குள்) என்ன பேட்டி எடுக்குறேன்ணு இவனுங்களே பேசுறானுங்களே கார்த்தாவே

சாமு: நீங்க தானே விஜய் டிவில சிவகார்த்திகேயனா மாறுவேசத்துல வரர்து??

மாமு: சீ.. நம்ம காக்கி என்ன அழகு.. எத்தன அழகு... அவர போய்??

சாமு: விஜய் கட்சில நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர்னு விசயம் அடிபடுது உண்மையா??

மாமு: ஆமாம்பா.. இவரு ஒரு நாள் நுங்கம்பாக்கம் ட்ரெயின எகிறி பிடிச்சாருல?? அதை பார்த்து விஜய் இம்பிரஸ் ஆகிட்டாரு!!

சாமு: அப்டியே வானத்துல பறந்த காக்காக்கு முத்தம் கொடுத்தீங்கள?

மாமு: அடுத்த முயற்சி கப்பல் மற்றும் சட்டலைட்ல ஃபுட்போர்ட் அடிக்க போறாரு.. அதுக்கு நம் வாழ்த்துக்கள்...

சாமு: ப்யுட்டி எப்படி இருக்காங்க??

மாமு: மாப்புள மாப்புள

சாமு: புரியுது புரியுது... மீரா எப்படி இருக்காங்க??

காகி: ரொம்ப ரொம்ப நல்ல இருக்காங்க

சாமு: மீராவும் லான்சும் ஓண்ணு...

மாமு: என்னடா சொல்ற??

சாமு: ஐய்ய... காக்கிய கலாய்க்கறதுல ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்பாங்க..

மாமு: ஆமாம்.. ஒரே மூள தானே ரெண்டு பேருக்கும்?

காகி: டேய்...

சாமு: ஐய்ய.. ஒரே மாதிரி மூள

மாமு: ஆனா வெளிஉலகம் என்ன சொல்லுதுனு தெரியுமா??

காகி: என்ன சொல்லுது?

சாமு: காக்கி கிட்ட மீரா எப்படி, ப்யுட்டி எப்படினு கேக்குறது, தோனிகிட்ட போய் இந்தியா கேப்டனு எப்படினு கேக்குற மாதிரில இருக்கு?

காகி: ஊர் ஆயிரம் சொல்லும் அத்ர்க்கு பதில் சொல்ல எனக்கு அவசியம் இல்ல

மாமு: சரி இப்போ ஃபோடோ சுற்று உங்க ஃபோடோவ லான்ஸ் உங்க ஓர்குட் சுட்டு இங்க போட்டு இருக்காரு...

சாமு: இப்படி எங்க யாருக்கும் தராம நீங்களே எல்லா ஃபிகரயும் எடுத்துக்கிட்டா வயசு பசங்க நாங்க என்ன பண்றது?

மாமு: டேய் பேரிசு நீ வயசானவனா??

காகி: டேய் உங்க சங்காதமே வேணாம்டா (ஓடுகிறார்)

சாமு: பாஸ் நில்லுங்க உங்க திருவோட வாங்கிட்டு போங்க....

மாமு: அப்பாடா ஒரு திருவொடு மிச்சம் !!!

சாமு & மாமு: மக்களே இப்படி உங்களயும் கூப்பிட்டு வெச்சி அசிங்க படுத்துவோம் வெகு விரைவில்...நன்றி நன்றி நன்றி

Sunday, January 18, 2009

சும்மா லுலுலுவாய்க்கு


வணக்கம் கண்ணு

வணக்கம் பெர்சு


எது கண்ணு பெர்சு? கொண்டையா?

கொண்டை இல்லை ஆனா....................................


இப்ப தான்பா பஞ்சாயத்து முடிச்சிட்டு வரேன்.. நீ வேற மனுசன ஏன் கண்ணு நோகடிக்கிற?

உன் தொண்ட.. அதான்பா வாய்னு சொல்ல வந்தேன்.. மெர்சில் ஆயிட்டியா?


உன் பேரு என்ன கண்ணு?

சிலுவ சிலுவ சிலுவ


சிலுவ.. உன்கிட்ட கம்ப்பூட்டர் இருக்கா?

பெர்சு... என்னான்ட சுனாமி அடிச்சிட்டு வந்த பப்டாப் இருக்கு..


பப்டாப்னா என்ன கண்ணு? அதுல நமிதா படம்லா வருமா?

அது இன்னானே தெரில நைனா.. வூட்டுக்காரி முனிமா தான் சொல்லிச்சி அது பப்டாப்னு.. ஆனா சில சமயம் குஜால் குஜால் பொண்ணுங்கலா வரும்பா..


எனக்கு ஒண்ணு காட்டேன்..

பாடல போற வயசுல, பல் இலிச்சிட்டு பிகருங்க கேக்குதா? உன்னலா ஏன்டா சுனாமி தூக்கல?


சரிபா.. கோபப்படாத.. ஒரு கட்டிங் வேணா தரேன்.. இதுல இன்டர்நெட் இருக்கா? உன்கிட்ட மீன் பிடிக்கிற நெட் தானே இருக்குன்.. ஹா ஹா.. எப்படி கண்ணு என் சோக்கு?

யோவ்.. சொக்கு பொடி போடுற வயசுல, சோக்கு, கீக்குனு மொக்க போட்ட, உன்ன வெட்டி பாடி கார்ட் முனிஸ்வரனுக்கு பலி போட்டுடுவேன்? சாக்ரத..

ரொம்ப மோசமான புள்ளயா இருக்கியே?? நாங்களும் ஒரு காலத்துல ரௌடி தான்..

ஐய்ய.. இதலா நைட் டிவில போடுறான் பெர்சு.. வேற ட்ரை பண்ணு.. சரி.. எதுக்கு லான்ச் பையன் உன்ன பாக்க சொன்னான்? எதாவது தெரியுமா?


கார்த்தி கண்ணு சொல்லுச்சே.. ப்ளாக் பத்தி பேச தான் இந்த சந்திப்பு.. உன்கிட்ட லான்ச் சொல்லலையா?

அவன் என்னான்ட ஒரு மேட்டர் கூட சொல்லல.. கசமாலம்.. டுபாக்கூர்.. நல்லவன் மாதிரி சீன் போட்டே யெஸ் ஆயிடுவான்

கண்ணு கார்த்தி சொன்னான் ப்ளாக் இங்கிப்பீலிச் வார்த்தையா இருந்தாலும், அது தமிழ் வார்தையில் இருந்து எடுத்தது கண்ணு.. உனக்கு தெரியுமா அந்த கத?

அப்டியா? ...நீ சொல்லி தான் எனக்கு தெரியும் பெர்சு.. சரி.. அது இன்னா கத? கொஞ்சம் அவுத்து வுடு..

(மனசுக்குள்- கத சொல்ல நல்ல சந்தர்ப்பம்)

யோவ்.. என்ன? ..மைண்ட் வாய்ஸா? மொக்க போட்ட, கொய்யால, ஊஊஊஊஊஊஊ சங்கு தான்..

அப்டிலா இல்ல கண்ணு.. ப்ளாக்னா மக்கள் எல்லாரும், வேற நாட்டுல இருந்தாலும், வேற வேற மொழி பேசுனாலும்.. ஊர விட்டு ஒதுக்கு வைக்காம.. எல்லாரும் ஒண்ணா பழகுற இடம் கண்ணு

ஓ.. இதாப்ல மேட்டரா?? அப்பால?

அதாவது சிவாஜி படத்துல பாப்பையா தம்பி சொல்வாருல வாங்க பழகலாம்னு.. அது மாதிரி இந்த இடம் எல்லாரும் பழகறதுனால, பழகு பழகு சுருங்கி, ப்ளாக் ஆயிடிச்சி... எப்படி கண்ணு!

டேய் பேமாளி.. காலங்காத்தால காண்டு ஏத்துற? முனிமா.. எடுறி அந்த திருக்கை வாள.. இந்த பெர்ச இன்னைக்கு போட்டாதான் என் மன்சு ஆறும்..

லான்ச்கும் கார்த்திக்கும் சில தோஸ்த்துங்க இது மூலமா கிடச்சி இருக்காங்க தம்பி.. அந்த நண்பர்களை கலாய்க்கனுமாம்... கலாய்க்கர்துனா என்னனு தெரியுமா கண்ணு?

இன்னா நைனா.. நம்பலாண்டையே மெட்ராஸ் தமிழா?

இந்த பசங்க ப்ளான் என்னனா, எங்க இவங்க கலாய்ச்சா அவங்கலா கோபப்பட்டு, இவங்க கூட பேச மாட்டாங்கனு பயந்து, நம்பல கூட்டிட்டு வந்து, கும்மி அடிக்க சொல்றாங்க..

ஓ.. அதானா மேட்டரு? சோக்கா கீதுபா.. அப்ப நாம எல்லாரையும் அந்தர் பண்லாம்..

வயசான காலத்துல எனக்கு எதுக்குபா ஊர் பொல்லாப்பு.. ஊருல வேற பல பிரச்சன.. நீ வேற ஆவூனா அறுவாவ தூக்குற.. பண்ணியே ஆகனுமா?

நாம நாமா வந்தா தானே பிரச்சன.. ஒரு சூரியா மாதிரி, கமல் மாதிரி, விஜய் மாதிரி(?!?!?!?!?!?!) கெட்-அப் மாட்டிண்டு வரலாம் ஓய்

கண்ணு.. ஏற்கனவே அவங்க ரெண்டு பேரு தான் எப்ப பாத்தாலும் கெட்-அப் பண்றாங்கனா, நாமலுமா கண்ணு?

பெர்சு இப்ப இது தான்லே ட்ரெண்டு.. நீ நம்ப பழய வாத்தியார் படம்லா பாத்ததில்லையா??

இல்லபா.. நா நமிதா படம்தான் பாப்பேன்

அதுல அவரு கன்னத்துல ஒரு மச்சம் வச்சி, கெட்-அப் மாத்துவாரு.. அவர யாரும் கண்டு புடிக்க மாட்டாங்க, பேரா வேற மாத்திக்கினுவாரு


செரி கண்ணு... நீ சொல்ற யோசனையும் நல்லா தான் படுது... ஆனா அதுக்குன்னு என் மீசய எடுக்க சொல்ல கூடாது... சரியா தம்பி

செறி பெர்ஸு அப்ப மச்சம்?


நீ வெச்சுக்கோ கண்ணு.. நமக்கு ஏற்க்கனாவே ஒடம்பெல்லாம் மச்சம்... நான் அந்நியன் மாதிரி முகத்துல கலர் அடிச்சிக்கிறேன் கண்ணு... அம்மணி மார்கழி மாச கோல பொடி வெச்சி இருப்பா கண்ணு.. அத பூசிகிறேன் கண்ணு .. என்ன சொல்ற?

நீ என்ன வேனாளும் பண்ணு பெர்ஸு... நமக்கு கெட்- அப் வேற.. .நான் நம்ம ராமராசன் கனக்க சூட்டு பூட்டு எல்லாம் போட்டு அந்த சன் டீவீ ஞாயித்துக்கிழமை பத்து மன்னிக்கு ஒருத்தர் வருவாரே அவார மாதிரி கால் மெல்ல கால் போட்டு வறேன் பெர்ஸு...யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்க


ரமாராஜன் எங்க கண்ணு சூட்டு போட்டான்? பயபுள்ள என் ஊருல தானே இருந்தான்...

படதுள்ள போட்டுட்டு இருந்தாரு பெர்ஸு, போட்டு காளமாட்டுல பால் கூட கரந்தாறு பா..


அப்ப அது ராமாராஜன் இல்ல கண்ணு...அது என் பெரியப்பா பையன் வினுசக்ரவர்த்தி கண்ணு...

அப்படியா பெர்ஸு? சொல்லவே இல்ல...


உன் பேச்சு கொஞ்சம் பயம்மா இருந்தாலும், நீ உள்ளுக்குலே நல்லவனா இருக்க பா... அதுனாலே நாம காலாய்க்க ஆரம்பிக்கலாம்.... அது மட்டும் இல்ல கண்ணு...நம்ம வேணாம்னு சொன்னாலும் அந்த பசங்க நம்பல சும்மா விடுவாங்களா??


செறி பெர்ஸு.. நாளைக்கு யார காலாய்க்கலாம்? ஆஅங் அடிமை சிக்கிட்டான் பெர்ஸு நம்ம காக்கி... எண்னாத் சொல்றா நீ பெர்ஸு?




எப்படி ஒரு காரியத்த நம்ம அய்யன்னார் சில முன்னாடி வேண்டிட்டு ஆரம்பிக்கிறாமோ, நீ முன்னிசுவரன்ல கண்ணு...அது மாதிரி நாம பொதுவா காக்கி சாமிய வச்சி ஆரம்பிப்போம் என்ன சொல்ற கண்ணு...???

ஷோக்கா சொன்ன பா மேட்டரூ...


சீலுவ... கிளம்பரத்துக்கு முன்னாடி நா ஒரு பன்ச் சொல்லிக்கிறேன் கண்ணு

சொல்லு பெர்ஸு


கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திருப்பி வாங்குற பழக்கமே எங்க பரம்பரைல இல்ல... டேய் பசுபதி எட்ரா வண்டிய..............

டேய் பேரிக்கா மண்டையா நில்லு நில்லு வேணா... போய்டான்யா...

சரி மக்களே... அடுத்த தடவ மீட் பண்றான் இந்த

ஸால்ட் கோட்டை ஸிலுவ...
ஸால்ட் கோட்டை ஸிலுவ...
ஸால்ட் கோட்டை ஸிலுவ...