வணக்கம் கண்ணு
வணக்கம் பெர்சு
எது கண்ணு பெர்சு? கொண்டையா?
கொண்டை இல்லை ஆனா....................................
இப்ப தான்பா பஞ்சாயத்து முடிச்சிட்டு வரேன்.. நீ வேற மனுசன ஏன் கண்ணு நோகடிக்கிற?
உன் தொண்ட.. அதான்பா வாய்னு சொல்ல வந்தேன்.. மெர்சில் ஆயிட்டியா?
உன் பேரு என்ன கண்ணு?
சிலுவ சிலுவ சிலுவ
சிலுவ.. உன்கிட்ட கம்ப்பூட்டர் இருக்கா?
பெர்சு... என்னான்ட சுனாமி அடிச்சிட்டு வந்த பப்டாப் இருக்கு..
பப்டாப்னா என்ன கண்ணு? அதுல நமிதா படம்லா வருமா?
அது இன்னானே தெரில நைனா.. வூட்டுக்காரி முனிமா தான் சொல்லிச்சி அது பப்டாப்னு.. ஆனா சில சமயம் குஜால் குஜால் பொண்ணுங்கலா வரும்பா..
எனக்கு ஒண்ணு காட்டேன்..
பாடல போற வயசுல, பல் இலிச்சிட்டு பிகருங்க கேக்குதா? உன்னலா ஏன்டா சுனாமி தூக்கல?
சரிபா.. கோபப்படாத.. ஒரு கட்டிங் வேணா தரேன்.. இதுல இன்டர்நெட் இருக்கா? உன்கிட்ட மீன் பிடிக்கிற நெட் தானே இருக்குன்.. ஹா ஹா.. எப்படி கண்ணு என் சோக்கு?
யோவ்.. சொக்கு பொடி போடுற வயசுல, சோக்கு, கீக்குனு மொக்க போட்ட, உன்ன வெட்டி பாடி கார்ட் முனிஸ்வரனுக்கு பலி போட்டுடுவேன்? சாக்ரத..
ரொம்ப மோசமான புள்ளயா இருக்கியே?? நாங்களும் ஒரு காலத்துல ரௌடி தான்..
கார்த்தி கண்ணு சொல்லுச்சே.. ப்ளாக் பத்தி பேச தான் இந்த சந்திப்பு.. உன்கிட்ட லான்ச் சொல்லலையா?
அவன் என்னான்ட ஒரு மேட்டர் கூட சொல்லல.. கசமாலம்.. டுபாக்கூர்.. நல்லவன் மாதிரி சீன் போட்டே யெஸ் ஆயிடுவான்
கண்ணு கார்த்தி சொன்னான் ப்ளாக் இங்கிப்பீலிச் வார்த்தையா இருந்தாலும், அது தமிழ் வார்தையில் இருந்து எடுத்தது கண்ணு.. உனக்கு தெரியுமா அந்த கத?
(மனசுக்குள்- கத சொல்ல நல்ல சந்தர்ப்பம்)
அப்டிலா இல்ல கண்ணு.. ப்ளாக்னா மக்கள் எல்லாரும், வேற நாட்டுல இருந்தாலும், வேற வேற மொழி பேசுனாலும்.. ஊர விட்டு ஒதுக்கு வைக்காம.. எல்லாரும் ஒண்ணா பழகுற இடம் கண்ணு
ஓ.. இதாப்ல மேட்டரா?? அப்பால?
அதாவது சிவாஜி படத்துல பாப்பையா தம்பி சொல்வாருல வாங்க பழகலாம்னு.. அது மாதிரி இந்த இடம் எல்லாரும் பழகறதுனால, பழகு பழகு சுருங்கி, ப்ளாக் ஆயிடிச்சி... எப்படி கண்ணு!
டேய் பேமாளி.. காலங்காத்தால காண்டு ஏத்துற? முனிமா.. எடுறி அந்த திருக்கை வாள.. இந்த பெர்ச இன்னைக்கு போட்டாதான் என் மன்சு ஆறும்..
லான்ச்கும் கார்த்திக்கும் சில தோஸ்த்துங்க இது மூலமா கிடச்சி இருக்காங்க தம்பி.. அந்த நண்பர்களை கலாய்க்கனுமாம்... கலாய்க்கர்துனா என்னனு தெரியுமா கண்ணு?
இன்னா நைனா.. நம்பலாண்டையே மெட்ராஸ் தமிழா?
இந்த பசங்க ப்ளான் என்னனா, எங்க இவங்க கலாய்ச்சா அவங்கலா கோபப்பட்டு, இவங்க கூட பேச மாட்டாங்கனு பயந்து, நம்பல கூட்டிட்டு வந்து, கும்மி அடிக்க சொல்றாங்க..
ஓ.. அதானா மேட்டரு? சோக்கா கீதுபா.. அப்ப நாம எல்லாரையும் அந்தர் பண்லாம்..
வயசான காலத்துல எனக்கு எதுக்குபா ஊர் பொல்லாப்பு.. ஊருல வேற பல பிரச்சன.. நீ வேற ஆவூனா அறுவாவ தூக்குற.. பண்ணியே ஆகனுமா?
நாம நாமா வந்தா தானே பிரச்சன.. ஒரு சூரியா மாதிரி, கமல் மாதிரி, விஜய் மாதிரி(?!?!?!?!?!?!) கெட்-அப் மாட்டிண்டு வரலாம் ஓய்
கண்ணு.. ஏற்கனவே அவங்க ரெண்டு பேரு தான் எப்ப பாத்தாலும் கெட்-அப் பண்றாங்கனா, நாமலுமா கண்ணு?
பெர்சு இப்ப இது தான்லே ட்ரெண்டு.. நீ நம்ப பழய வாத்தியார் படம்லா பாத்ததில்லையா??
இல்லபா.. நா நமிதா படம்தான் பாப்பேன்
அதுல அவரு கன்னத்துல ஒரு மச்சம் வச்சி, கெட்-அப் மாத்துவாரு.. அவர யாரும் கண்டு புடிக்க மாட்டாங்க, பேரா வேற மாத்திக்கினுவாரு